» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்கள் இடையே தகராறு 3பேர் கைது

வியாழன் 17, மே 2018 11:24:39 AM (IST)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண்கள் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சாந்தி (37), பாஸ்கர் மனைவி பழனியம்மாள் (47), தட்டபாறையைச் சேர்ந்த உசேன் மனைவி மணியம்மாள் (40), முத்தையாபுரத்தைச் சேர்ந்த செல்லதுரை மனைவி கலாராணி (40), ஆறுமுகநேரியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னலெட்சுமி இந்த 5 பெண்களும் திருமணம் போன்ற விழாக்களில் சமையல் வேலை செய்து வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் அவர்கள் அனைவரும் பழைய பேருந்து நிலையம் வந்துள்ளனர். 

அப்போது, சம்பளத்தை பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், பழனியம்மாள், சாந்தி ஆகிய இருவரையும் மணியம்மாள், கலாராணி, அன்னலெட்சுமி ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்தியபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து மணியம்மாள் உட்பட 3 பெண்களையும் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர் படுத்தினார். பின்னர் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory