» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாழையூத்து அரசுபஸ் எரிப்பு சம்பவத்தில் இருவர் கைது : தேடுதல் தொடரும் என எஸ்பி உறுதி

புதன் 16, மே 2018 8:48:50 PM (IST)



ராக்கெட் ராஜா கைது செயப்பட்டதற்கு எதிராக வடக்கு தாழையூத்தில் பஸ்சை எரித்த சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராக்கெட் ராஜா கைது செயப்பட்டதற்கு எதிராக வடக்கு தாழையூத்தில் நேற்று(15.05.18)  அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய  பண்டாரகுளத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ஜோசப் (23), அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஆனந்த் (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  18 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் திட்டமிட்டிருந்த  13 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 5 நபர்கள் பிணை ஆணையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் மீதான தேடுதல் வேட்டை தொடரும் என்று திருநெல்வேலி மாவட்டஎஸ்பி அருண்சக்திகுமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Joseph Marketing




Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory