» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 தேர்வு தோல்வியால் தீக்குளித்த மாணவி சாவு

புதன் 16, மே 2018 7:09:06 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்த சுப்பிரமணியபுரம் மாணவி இன்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இதில் குளத்துார் அருகே சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் பலவேசம் என்பவரது மகள் முத்துச்செல்வி (17) என்பவரும் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.இன்று தேர்வு முடிவுகளை பார்க்கும் போது அவர் 2பாடங்களில் பெயிலானதில் இன்று காலை முதலே முத்து செல்வி கடும் மன உளைச்சலில் இருந்தாராம். 

எனவே வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடனே அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு சுமார் 90 சதவிதம் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இன்று மாலை மாணவி முத்துசெல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD





crescentopticals

Joseph Marketing


New Shape Tailors



Thoothukudi Business Directory