» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் 144 தடை கோரி வழக்கு : தூத்துக்குடி எஸ்பிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!

புதன் 16, மே 2018 5:52:37 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களில் ஆட்களை திரட்டி வருகின்றனர் என்று ஸ்டெர்லைட் ஆலை நிறுவன பொதுமேலாளர் தொடர்ந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் நிறுவன நலன் கருதி ஆலைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும், வழக்கு விசாரணையை நாளை  17ம் தேதி தொடரும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Joseph Marketing



New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory