» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விபரம்

புதன் 16, மே 2018 5:02:43 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.6சதவீதம் ஆகும். இதில், 6 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 23 அரசுப் பள்ளிகளில் 6 பள்ளிகள் மட்டுமே நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. செவலப்பேரி மேல்நிலைப் பள்ளி, வாழவல்லான் மேல்நிலைப் பள்ளி, கீழப்பூவானி மேல்நிலைப் பள்ளி, ஏரல் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிவகளை மற்றும் கொம்பன்குளம் ஆகிய 6 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.84 ஆகும். 

மேலும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 61 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.57 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 35 மெட்ரிக் பள்ளிகளில் 27 பள்ளிகளில் 100 சதவீதம் சதவீதம் பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 98.96 ஆகும். மேலும், 133பேர் தனித் தேர்வாளர்களாக பங்கேற்றனர். இதில், 132பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிகளில் 13,587பேர் தேர்வு எழுதினர். இதில், 12,990பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.6சதவீதம் ஆகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors


Joseph MarketingThoothukudi Business Directory