» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் அலுவலங்களில் குறைந்த கட்டணத்தில் சேவை : பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

புதன் 16, மே 2018 3:43:22 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்களில் முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல பயனுள்ள சேவைகளை வழங்குவதில் எப்பொழுதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வகையில் இந்திய அஞ்சல் துறை தற்போது UIDAI ( Unique Identification Authority of India) யோடு இணைந்து ஆதாரில் பெயர், முகவரி மற்றும் பயோமெட்ரிக் போன்ற திருத்தங்களை தமிழகத்தில் தென்மண்டலத்தில் மட்டும் 723 அஞ்சல் அலுவலகங்களில் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்றைய காலகட்டணத்தில் ஒவ்வொரு குடிமகனும் அரசின் நலத்திட்டங்களை பெறவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு சேவையை பயன்படுத்த வேண்டும் என்றாலோ ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே தான் மக்கள் தங்களுக்கு புதிய ஆதார் பெற்றிடவேண்டும் என்றாலோ அல்லது ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் போன்றவற்றில் திருத்தங்கள் செய்திட வேண்டும் என்றாலோ அருகிலுள்ள அஞ்சல் அலுவலங்களை பயன்படுத்திக் கொண்டு சுலபமாக ஆதார் சேவைகளைப் பெற்றிட அரசு வழிவகை செய்துள்ளது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள் உள்ளிட்ட சுமார் 37 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டண விபரங்கள் பின்வருமாறு (GST நீங்கலாக).

1. புதிய ஆதார் விண்ணப்பித்தல் இலவசம் 

2. பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் திருத்தம் செய்தல் ரூ.30

3. பயோமெட்ரிக் திருத்தம் செய்தல் ரூ.30

4. ஆதார் அட்டை கலரில் அச்சிட ரூ.24

5. ஆதார் அட்டை கருப்பு வெள்ளையில் அச்சிட ரூ.12

மேலும் தபால் துறையில் பல வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருவர் தான் அனுப்பிய பதிவு தபால் / விரைவுத் தபால் போன்றவை பட்டுவாடா செய்யப்பட்ட உடன் தபால் பதிவு செய்பவரின் கைப்பேசிக்கு தகவல் அனுப்பப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவுத் தபால் அனுப்பும் வசதி அனைத்துக் கிராமப்புற அஞ்சல் அலுவலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற தனியார் கூரியர் நிறுவனங்களைவ விட மிகக் குறைந்த விலையில் வெளிநாட்டு தபால்கள் அனுப்பப்படுகின்றன. 

உதாரணமாக


எனவே மக்கள் அனைவரும் தபால் துறையின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
New Shape Tailors

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory