» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் : வி.வி.டி.சிக்னல் பகுதியில் நாளை பொதுக்கூட்டம்

புதன் 16, மே 2018 3:23:27 PM (IST)

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் சென்றார். இன்று குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு நாகர்கோவிலில் தங்குகிறார்.

நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் குறை கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை காலை 10 மணிக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து காலை 10.15மணிக்கு மணப்பாடு மீனவர் மக்கள் சந்திப்பும், 11 மணிக்கு திருச்செந்தூரில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்கள் சந்திப்பு நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதிமய்யத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


crescentopticals



Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory