» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உயிர்ப்பலி வாங்கும் விவிடி சிக்னல் பகுதி: மேம்பாலம் அமைவது எப்போது? பொதுமக்கள் கேள்வி
புதன் 16, மே 2018 10:44:31 AM (IST)

துாத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மேம்பாலம் பணிகள் எப்போது துவங்கும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தின் பிற மாநகராட்சிகள் எல்லாம் வளர்ச்சியில் குதிரை வேகத்தில் செல்ல துாத்துக்குடியின் வளர்ச்சி ஆமை வேகத்தில் கூட இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் செய்த மறைந்த ஜெயலலிதா தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் துாத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் துாத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற உடன் அப்போதைய ஆட்சியராக இருந்த ஆஷிஷ்குமார் மாநகராட்சிப் பகுதியில் மீன்வளக் கல்லூரிக்கு எதிரே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் எடுத்தார். ஆனால் துாத்துக்குடி மாநகராட்சிக்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று வரை அப்பிரச்சனை அப்படியே இருக்கிறது. மேலும் விவிடி சிக்னல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை பலத்த எதிர்ப்புக்கிடையே அகற்றினார். ஆனால் அவர் மாறுதலாகி சென்றதும் மேம்பாலப் பணிகள் முடங்கியது.
விவிடி சிக்னல் மேம்பாலம் பற்றி கடந்த வருடம் ஜூலை மாதம் பேட்டியளித்த துாத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ்,விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து நில நிர்வாக ஆணையருக்கு (சிஆர்ஐ) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றார். தற்போது அந்த பணிகளின் நிலைமை என்னவென தெரியவில்லை.
கடந்த 12 ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் (75). வி.வி.டி.சிக்னல் அருகே உள்ள ஒரு குறுகிய தெருவிலிருந்து மொபட்டில் வந்தார். அப்போது நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். விவிடி சிக்னல் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் சுமார் 20 அடிக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து கடைகளை கட்டியுள்ளதாக வாகனஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மேலும் பல உயிர்கள் பறிபோகும் முன் துாத்துக்குடியில் மக்கள் பிரநிதிதிகளாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, நட்டர்ஜி எம்பி, எம்எல்ஏ கீதாஜீவன் ஆகியோரும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், விரைந்து நடவடிக்கை எடுத்து விவிடி சிக்னல் மேம்பாலம் அமைக்கவும், அப்பகுதியில் ஆக்ரமிப்பினை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
வடிவேல்மே 16, 2018 - 05:16:00 PM | Posted IP 162.1*****
ஆக்கிரமிப்பே அவனுங்க தான் பண்ணி இருக்கானுங்க.
ஆமா.அருண் விஜய் காந்திமே 16, 2018 - 03:19:31 PM | Posted IP 162.1*****
பயனுள்ள செய்தி
RAJAமே 16, 2018 - 11:04:02 AM | Posted IP 162.1*****
Super
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:17:09 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:11:55 PM (IST)

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:06:21 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:56:40 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:45:43 PM (IST)

கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை : தூத்துக்குடியில் சீமான் பேட்டி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:38:19 PM (IST)

பொதுமக்கள், தூத்துக்குடிமே 17, 2018 - 02:25:44 AM | Posted IP 108.1*****