» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மத மோதலை ஏற்படுத்த முயற்சி : இந்து முன்னணி குற்றச்சாட்டு!!

புதன் 16, மே 2018 10:22:29 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் பெரும்பாண்மையான‌ மக்கள் இந்து மக்களே ஆவார்கள். இந்த ஆலையை மூட வேண்டும் என்ற மக்கள் கருத்தே இந்து முன்னணியின் கருத்து ஆகும். இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளாகும் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.

ஆனால் தற்போது, போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, மதமாற்றம் செய்யும் கும்பலுடன் கைகோர்த்து மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த‌ செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். இதனை எதிர்த்து நாங்கள் பிரச்சாரம் செய்தால், மதமோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மாவட்ட நிர்வாகமே போறுப்பு ஏற்க வேண்டும். இதில், நாலுமாவடியைச் சேர்ந்த மதபோதகர் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். மத்திய மாநில அரசுகளை குறை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை இந்து முன்னணி வண்மையாக கண்டிக்கிறது. மாவட்ட நிர்வாகமும், அரசும் இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்மே 17, 2018 - 12:46:53 PM | Posted IP 172.6*****

@வீரய்யன் ....அது என்ன உங்க பாரத பிரதமர்? நீ என்ன அப்பிரிக்காவிலா இருக்க?

வடிவேல்மே 16, 2018 - 05:19:54 PM | Posted IP 162.1*****

மொத்தத்தில் இந்து முன்னணி விலை போய் விட்ட்து

ARUNமே 16, 2018 - 03:26:28 PM | Posted IP 162.1*****

எப்படியோ ,போராட்டத்தை சிதைத்து ,மக்களின் ஒற்றுமைக்கு ஆப்பு வைத்தாகி விட்டது ...1996 இல் சாதி கலவரம் ,இப்போ மத கலவரம் ,,,நடத்துங்க ,,,உங்களை போல ஆட்கள் உள்ளவரை ,ஸ்டெர்லைட் ஐ ஒன்றும் புடுங்க முடியாது ,,,, இன்னும் எதனை நாட்களுக்கு மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க போறிங்களோ ,,,த் தூ

தூமே 16, 2018 - 02:44:31 PM | Posted IP 162.1*****

இந்து முன்னணி க்கு ஸ்டெர்லிட் வேணும் அவ்ளவுதானே...

வீரையன்மே 16, 2018 - 02:16:36 PM | Posted IP 162.1*****

உங்க பாரத பிரதமருக்கு என்ன தகுதி இருக்கு? நல்ல படிச்ச, பண்பான எத்தனையோ பெரு பிஜேபி ல இருக்கும் பொது, இந்த MUDDy தான் கிடைச்சாரா?

Tamilanமே 16, 2018 - 01:57:40 PM | Posted IP 162.1*****

பாராட்டு

நண்பன்மே 16, 2018 - 01:40:55 PM | Posted IP 162.1*****

Sterlite ஐ மூடவேண்டும் என்பதுதான் அணைத்து மதத்தினரின் கோரிக்கை. தயவு செய்து யாரும் மதத்தையோ , கட்சியோ வைத்து போராட்டத்தை பிளவுபடுத்த வேண்டாம். தங்கள் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதனை செயல்படுத்தாமல், Sterlite க்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் செயல்களை தூத்துக்குடி மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நரேன்மே 16, 2018 - 12:32:48 PM | Posted IP 162.1*****

அப்போ போராட்டம் வேண்டாம் ஆலையை இழுத்து மூடுங்கள்

தமிழ்ச்செல்வன்மே 16, 2018 - 12:22:26 PM | Posted IP 162.1*****

ஆரம்பத்தில் ஆலையை மூட வேண்டும் என்று அனைவரோடும் சேர்ந்து சொன்ன இந்து முன்னணி இப்போது பொன் ராதா தூண்டுதலின் பேரில் தனி கச்சேரி நடத்துகிறது. இது நல்லது அல்ல. ஆலையை மூடினால் எல்லாம் அடங்கி விடும். ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் உளவு துறையும் ஸ்டெர்லிட் க்கு ஆதரவாக செயல்படுவது கண்கூடாக தெரிகிறது. இனி என்ன நடக்கப் போகிறது?

tamilanமே 16, 2018 - 11:53:07 AM | Posted IP 162.1*****

அப்போ போராட்டம் வேண்டாம் ..ஆலையை இழுத்தி மூடுங்கள் ..

தமிழன்மே 16, 2018 - 11:47:30 AM | Posted IP 162.1*****

முற்றிலும் உண்மை. காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும்.....மத போதகர் வெளிப்படையாகவே நமது பாரத பிரதமரை விமர்சிக்கிறார்.

பப்ளிக்மே 16, 2018 - 10:39:36 AM | Posted IP 162.1*****

இந்த விஷயத்தைத்தான் போராட்டம் ஆரம்பிச்ச நாள் முதல் என்ன மாதிரி தனி மனிதன்லா சொல்லிட்டு வரோம், இந்த போராட்டத்தை வச்சி மதமாற்ற கும்பல் தன் குறுக்கு புத்திய காட்டுதுன்னு நீங்க லேட்டுஉஉ ..................

Indianமே 16, 2018 - 10:35:46 AM | Posted IP 162.1*****

உண்மை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


Joseph Marketing


New Shape Tailors

CSC Computer EducationNalam PasumaiyagamThoothukudi Business Directory