» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடக்கம்

செவ்வாய் 15, மே 2018 7:39:02 PM (IST)



தூத்துக்குடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி சென்னை சில்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.சி. வினித்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் மட்டுமின்றி 3 மாநிலங்களில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் 24 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஆகியவை தொடங்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக தி சென்னை சூப்பர் பஜார் என்ற விற்பனை நிலையத்தை தொடங்கி உள்ளோம். தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தில் மளிகைப் பொருள்கள், காய்கனி, வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் உள்ளன. தரம் மற்றும் குறைந்த லாபத்துடன் கூடிய விற்பனை என்பதால் தி சென்னை சூப்பர் பஜார் விற்பனை நிலையத்துக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகபட்ச சில்லறை விலையை விட 10 சதவீத விலையை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

இதுதவிர, தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் தினமும் காலை 1 மணி நேரம் அதிரடி விலை குறைப்பில் ஜவுளி விற்பனை நடைபெற்று வருகிறது.  குழந்தைகளின் சிந்தனைத் திறனை அதிகரிக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். பேட்டியின் போது, மண்டல மேலாளர் அருண்குமார், தங்க மாளிகை மேலாளர் வசந்த், மேலாளர் பொன்னரசு, சூப்பர் பஜார் நிறுவன மேலாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

Vasanthanமே 17, 2018 - 07:19:03 PM | Posted IP 172.6*****

மாடல் தரம் இரண்டும் இல்லை

geethaமே 16, 2018 - 03:42:48 PM | Posted IP 162.1*****

ரேட் ஓவர் இவங்க builtup ரொம்ப ஓவர்

கோமதிப்பிரியாமே 16, 2018 - 09:48:05 AM | Posted IP 162.1*****

ஜவுளிகள் அனைத்தும் சூப்பராக உள்ளது

Anandமே 16, 2018 - 06:27:11 AM | Posted IP 172.6*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

New Shape Tailors

Joseph Marketing





Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory