» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி: மர்ம நபர்களுக்கு போலீ வலை!!

செவ்வாய் 15, மே 2018 10:32:22 AM (IST)

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாள் இரவில் இருவேறு இடங்களில் வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மோகன்தாஸ் காந்தி(47), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 3வது மைல் பாலம் வழியாக வந்தபோது, மர்ம நபர் ஒருவர் இவரை வழிமறித்து அவரது பையில் இருந்த செல்போனை பறித்துச் சென்று தப்பியோடிவிட்டான். 

தூத்துக்குடி பெருமாள்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் வேல்குமார்(31). இவர் துறைமுக வளாகத்தில் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தெற்கு பீச் ரோட்டில் சென்ற போது, அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் அவரை தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் அரைப் பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அந்த 4 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் புகார்களின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் சமீப காலமாக இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து வருபவர்களை குறிவைத்து இந்த சம்பவங்கள் நடக்கிறது. மேலும் இருள் சூழ்ந்த பகுதிகள், மின்தடையை பயன்படுத்தி வழிப்பறி திருடர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors



Joseph Marketing




Thoothukudi Business Directory