» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம்: பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

சனி 5, மே 2018 5:25:05 PM (IST)

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் சென்று விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம்  என ஆட்சியர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், கல்வெட்டாங்குழிகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் கிணறுகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தற்போது பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. சிலவற்றில் தண்ணீர் இருப்பு குறைந்து சேறும் சகதியுமாக உள்ளன. 

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து விட்டதாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டதாலும் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்கின்றனர். சிறுவர்களுக்கு அந்த நீர் நிலைகளின் ஆழமும், பிற தன்மைகளும் தெரிவதில்லையாதலால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற வகை ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் சென்று விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம். 

மேலும், வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் பகல் வேளைகளில் குழந்தைகள் வெளியில் செல்வதையும் அனுமதிக்க வேண்டாம். அதே வேளையில் அவர்களின் சிந்தனையை ஆக்கப்பூர்வான வழிகளில் செலுத்திட பல்வேறு திறன் வளர் பயிற்சிகள், விளையாட்டு, யோகா, தற்காப்பு கலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். எனவே பெற்றோர்கள் குறிப்பாக கிராமப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறைக் காலம் முழுவதும் கவனமாக கண்காணிப்பதோடு பயனுள்ளதாகவும் மாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals







Joseph Marketing


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory