» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பக்கிள் ஓடை பசுமை பூங்காவாக மாற்றம் : முதற்கட்ட பணிகள் தீவிரம் - ஆணையர் தகவல்

சனி 5, மே 2018 3:32:54 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடை பசுமை பூங்காகவாக உருவாக்க முதற்கட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் அலுவலகங்கள் போன்றவற்றில் இருந்து வெளியாகும் கழிவு நீரானது மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வாயிலாக கடற்கரையில் சென்றடைகிறது. மேற்படி பக்கிள் ஓடையானது எப்சிஐ குடோன் முதல் திரேஸ்புரம் வரையிலான 7.50கி.மீ. நீளம் கொண்டாகும்.

மேற்படி பக்கிள் ஓடையினை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து சுற்றுபுற சூழல் பாதுகாப்பினை மையமாகக் கொண்டு மேற்படி பக்கிள் ஓடையின் இருபுறமும் கம்பி வலைகள் அமைக்கப்பட்டு நடைபாதைகள், எப்சிஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடையின் இருபுறமும் சாலைகள், இருக்கை வசதிகள், மரங்கள், பூஞ்செடிகள், மின் விளக்குகள் மற்றும் இடவசதியுள்ள இடங்களில் சிறுவர் பூங்காக்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

மேலும் பக்கிள் ஓடையில் சேகரமாகும் கழிவுநீரை நேரடியாக கடலில் கலப்பதை தவிர்க்கும் விதமாக மேற்படி பகுதியில் ஆiஉசடி வசநயவஅநவே யீடயவேள அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தினை செயலாற்றும் வகையில் முன்மொழிவு கோரிக்கை (RFP) 28-02-2018 அன்று கோரப்பட்டதில் இரு நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் தகுதி வாய்ந்த நிறுவனமான Wapcose Ltd, Chennai நிறுவனமானது தேர்வு செய்யப்பட்டு 08-03-2018 அன்று வேலை உத்திரவும் வழங்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் செல்லும் பகுதியினை நவீன முறையில் சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம் பொது மக்கள் நலன் கருதி பசுமை பூங்காகவாக உருவாக்கும் பணிக்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து உரிய வழிமுறையாக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

என்றும் அன்புடன்...மே 6, 2018 - 12:33:45 AM | Posted IP 162.1*****

உண்டான சாலைகளை சீரமைக்க வழியக்கானும் அதில இதுவேறயா ? தொடரட்டும் பணி.

knrtமே 5, 2018 - 06:58:25 PM | Posted IP 141.1*****

தங்களின் செயல் திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingNew Shape TailorsThoothukudi Business Directory