» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டொ்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை: வேதாந்தா குழுமம் திட்டவட்டம்

திங்கள் 30, ஏப்ரல் 2018 3:16:34 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மதுரை புறவழிச் சாலையில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலை விரிவாக்க செய்ய திட்டமிட்டது. ஆனால், ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு அந்த ஆலையைச் சுற்றி இருக்கும் பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரத்தில் மக்கள் 78-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் ஆர்.கிஷோர் குமார், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் பெறச் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியவர், ஆலையிலிருந்து வெளியாகும் மாசு குறித்த தகவல்கள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உள்ளது என்றார். 

மேலும் ஆலையின் உரிமம் காலாவதியாவதற்கு முன்பே, அதனை நீட்டிக்கக் கோரி மனு அளித்ததாகவும், உரிமம் காலாவதியான பிறகே தமிழக அரசு கூடுதல் தகவல்களை கேட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயங்களும் மற்ற நீதிமன்றங்களும் நீண்டகாலத்துக்கு முன்பே சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூடுவதால் நாள்தோறும் ஆயிரத்து 200 டன் தாமிர உற்பத்தி பாதிக்கப்படும். இறக்குமதி அதிகரிக்கும் என்றும் கிஷோர் குமார் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

maniமே 3, 2018 - 01:28:43 PM | Posted IP 162.1*****

நறிய ஊருக்குள்ள விட்டதே தப்பு இதுல அதிகாரம் வேற கடவுள் இருக்கிறார் நிச்சயம் மக்களுக்கு நல்லதே நாடாகும் நீ என்ன மூட மாட்டேன் சொல்றது எல்லா மக்களும் நம்புற தெய்வம் கண்டிப்பா ஆலைய மூடும்.

vadivelமே 1, 2018 - 05:55:03 PM | Posted IP 172.6*****

இவளவு thenavettaa பேட்டி கொடுக்கிறான் அப்போ எவ்வளவு காசு கொடுத்து இருப்பான்.

ஒருவன்Apr 30, 2018 - 07:13:10 PM | Posted IP 162.1*****

நாம தான் மாறி மாறி போலி திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு முட்டாள்கள் ஆனோம் .. இங்கு டுபாக்கூர் அரசியல்வாதிகள் இருந்ததும் எந்த பயனும் இல்லை .. அவருக்கெல்லாம் பணம் , பதவி மட்டும் தான் முக்கியம் ..

ஒருவன்Apr 30, 2018 - 04:11:12 PM | Posted IP 162.1*****

வடநாட்டவனுக்கு (இந்திக்காரனுக்கு) தமிழ் நாட்டில என்ன வேலை ??

சாமிApr 30, 2018 - 04:04:34 PM | Posted IP 162.1*****

அதெல்லாம் சரி - ஆனால் அதுக்கு மக்களின் உயிரை விலையாக தரமுடியாது

MakkalApr 30, 2018 - 03:59:49 PM | Posted IP 108.1*****

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Joseph Marketing


CSC Computer Education

New Shape Tailors


Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory