» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களை விடுதலை செய்யக் கோரி மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:23:14 PM (IST)தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், தடுப்புகளையும் மாணவர்கள் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தென்பாகம் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலளார் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாதர் சங்க நிர்வாகி பூமயில், சிஐடியூ நிர்வாகிகள் சங்கரன், பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மறியல் தொடர்பாக 30பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

தமிழன்Apr 17, 2018 - 07:34:30 PM | Posted IP 162.1*****

மாணவர்களை சரியானவழியில் ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்த முயற்சிபன்னுங்கள்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Johnson's Engineers

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory