» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 4:52:36 PM (IST)காஷ்மீரில் சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபாவை கடத்தி சென்று பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி கொலை செய்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தூக்கு தண்டனை விதித்திட வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். 

மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில மேலான்மைக்குழு உறுப்பினர் முஹம்மது ஒலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் தமீம் அன்சாரி, துணைச் செயலாளர்கள் சிக்கந்தர், இமாம் பரீது, மாணவரணி செயலாளர் ஷமீம், ஸ்ரீவைகுண்டம் கிளைத் தலைவர் அஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பெண்கள் திரளானோர்  கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் அஸாருதீன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

பப்ளிக்Apr 18, 2018 - 10:56:00 AM | Posted IP 172.6*****

இந்த கான் கிராஸ் வேலையே நாட்டை கலவரமாக்க முயற்சிக்கிறார்கள் களவாணி கான் கிராஸ்

சாமிApr 17, 2018 - 07:37:57 PM | Posted IP 141.1*****

மிகை படுத்தப்பட்ட செய்திகள் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் - இது காங்கிரசின் சித்து விளையாட்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


New Shape Tailors

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory