» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 4:39:37 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் கல்லூரி நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நாகராஜன் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார். 

விழாவில் ஆங்கிலத்துறை பேராசிரியை சுபாஷினி வரவேற்றார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் அ.சுருளியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது பி.இ., பட்டப்படிப்பினை முடித்தவுடன் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் விரிவுரையாளராக சேர்ந்து, பின்னர் ம.சு.பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக இணைந்து இன்று தேர்வாணையராக உயர்ந்துள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். 

இன்று இக்கல்லூரியில் பணியாற்றிய மாணவர்கள் பலர் உலகமெங்கும் பரவி பற்பல பொறுப்புகளில் உள்ளதை நினைவுகூர்ந்தார். தமிழகத்தில் திறம்பட விளங்கும் சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் இணைந்துள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆக்கபூர்வமான செயல்களை பகிர்வதால் இன்றும் நான் எனது அறிவினை மென்மேலும் வளர்த்திட ஏதுவாக உள்ளது என்றும், எனவே, மாணவர்களே ஆசிரியர்களின் அறிவினை மேம்படுத்துபவர்கள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். 

விழாவில் கல்லூரியிலிருந்து இக்கல்வியாண்டில் பணிஓய்வு பெறும் பேராசிரியர்கள் மா.முனியசாமி, பா.ஜெயராம கிருஷ்ணராஜ், மற்றும் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பெருமாள், நைசத்குமார், மந்திரம், அழகிரி, ஆறுமுகம் ஆகியோர்களின் பணியினை பாராட்டி பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதுபோல பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 10 மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் சார்பில் வெள்ளிப்பதக்கம், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பு இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர்களுக்கும், சிறப்பாக பணிசெய்த அதிகாரிகளுக்கும் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் சிவபாக்கியம், முரளி, லெ.ராஜேஸ்வரி ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட தமிழக பாராம்பரிய பரதம், கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் ஆகியவை இடம்பெற்றன. தாவரவியல்துறை தலைவர் செந்தூர்பாண்டி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தூர்பாண்டி ஒருங்கிணைப்பில் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் நாகராஜன், ஆ.தேவராஜ், பேராசிரியர்கள் வேல்குமார், சண்முகராஜா, சிவகாமி, ராமலட்சுமி, சரவணன், நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Joseph Marketing

crescentopticals


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory