» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞரை காரை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது: கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:57:56 PM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார். வழக்கறிஞரான இவர் கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்க செயலாளராக உள்ளார். இன்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் மகேந்திரகுமார், மற்றொரு வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் நடந்து சென்ற போது, அவர் பின்னால் வேகமாக வந்த ஆம்னி வேன் மகேந்திரகுமார் மீது மோதியது, இதில் நிலைகுலைந்த போன மகேந்திரகுமார் கீழே விழுந்து  விட, அவரை காரில் வந்த நபர் அரிவாளல் வெட்ட முயன்றுள்ளார். 

இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் மகேந்திரகுமார் சகோதிரி வனிதாவின் முன்னாள் கணவர் விஜயக்குமார் என்பது தெரியவந்தது. தூத்துக்குடி காரப்பேட்டைய சேர்ந்த விஜயக்குமாருக்கு, வனிதாவிற்கு குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வனிதாவிற்கு ஆதரவராக நீதிமன்றத்தில் மகேந்திரகுமார் ஆஜராகவது மட்டுமின்றி, அவருக்கு ஆதவரவாக இருக்கின்றார் என்ற ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

இதில் காயமடைந்த வழக்கறிஞர்கள் மகேந்திரக்குமார், அருண்குமார் ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விஜயக்குமாரை போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் வழக்கறிஞர் மகேந்திரக்குமாரை கொலை செய்ய முயன்றவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்த்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை கொல்ல முயன்ற சம்பவம் அங்கு பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

New Shape Tailors


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Joseph MarketingThoothukudi Business Directory