» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

​நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரித்தால் உண்மை வெளிவரும்: டிடிவி தினகரன் பேட்டி

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:34:21 PM (IST)

​பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும் என டிடிவி தினகரன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: காவிரி வழக்கில் பிப்ரவரி 16ல் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை கொடுத்து அதற்கு பிறகு மேல்முறையீடு கிடையாது என்றார்கள். அதில் காவிரி நடுவர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும் என்ற சொன்ன பிறகும், அதை காலம் தாழ்த்தி அதில் விபரம் கேட்ட பிறகு மீண்டும் மே 3 வரை அவகாசம் கொடுத்துள்ளதாக கூறினர். 

கர்நாடகா சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து காலம் கடத்துவதாக அனைவரும் நினைத்தோம். ஆனால், தற்போது முரளிதரராவ் பேட்டியை பார்த்தால் அடுத்த 2019 பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரை காவிரி மேலான்மை வாரியம்  பாஜக அரசு அமைக்க போவதில்லை எனத் தெரிகிறது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் துணை வேந்தர் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கவர்னர் விசாரணைக் குழு அமைத்திருப்பது என்ன காணத்திற்காக என்பது தெரியவில்லை. நீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை செய்தால்தான் இதில் உண்மை வெளிவரும். 

இதில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் யார் என்பதும்  தெரியவரும். கூட்டுறவு சங்க தேர்தலில் தொடர்பாக எங்கள் கட்சி மாவட்ட செயலாளர்களை இரவோடு இரவாக துரிதமாக கைது செய்த போலீசார், போராசிரியை விவகாரத்தில் 7 மணி நேரம் தாமதப்படுத்தியது ஏன்?இதுகுறித்து தமிழக மக்களுக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. பாஜக தமிழகத்தை இந்திய வரைபடத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள். காவிரி விவகாரத்தில் பாஜகவினர் பேசுவது அவர்களது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்காக போராடுவதை விட்டுவிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது போகாத ஊருக்கு சொல்லும் வழியாக தெரிகிறது என டிடிவி தினகரன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory