» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம் : ஏப்.23ம் தேதி தொடக்கம்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:28:09 PM (IST)

கோவில்பட்டி, தூத்துக்குடியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம் 23ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு, சார்பில் கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வு திட்ட 5 நாள் பயிற்சி முகாம் 23.04.2018 முதல் 27.04.2018 வரை தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வைத்து நடைபெற உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் பத்து இடங்களை பெற்றவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு காலை 6.30 முதல் 9.00 மணி வரை, தூத்துக்குடி, ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள SDAT மாவட்ட விளையாட்டரங்கத்திலும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை, கோவில்பட்டி லெட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் வைத்து நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி, உபகரணங்கள் வழங்கப்பட்டு, அறிவியல் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நிறைவு விழாவில் அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Joseph Marketing

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory