» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: தூத்துக்குடியில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:27:56 AM (IST)

எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என தங்கதமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன்   நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.  துணைப் பொதுசெயலர் டி.டி.வி.தினகரன், கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) மாலை அணிவிக்கிறார். 

அதனையடுத்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்க மறுத்ததையடுத்து, நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,  எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு இன்னும் 2 நாள்களில் வரும் என எதிர்பார்க்கிறோம்; நல்ல தீர்ப்பு வரும், அதன்படி தமிழகத்திற்கு நல்ல விடிவுகாலம் வரும் என்றார் அவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph Marketing






Thoothukudi Business Directory