» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரியில் 5,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் : 6 பேர் கைது

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:23:50 AM (IST)

கழுகுமலையில் 5,300 கிலோ ரேஷன் பச்சரிசியை கடத்தியது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை மேல கேட் அருகே உதவி ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது விருதுநகரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்த புரத்தையடுத்த சுள்ளிமானூருக்கு பொருள்களை எடுத்துச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். 

அதில் 50 கிலோ எடை கொண்ட 106 மூட்டை ரேஷன் பச்சரிசி இருப்பது தெரியவந்தது.  அதையடுத்து போலீசார் லாரி ஓட்டுநர் தெற்கு கழுகுமலையைச் சேர்ந்த காமராஜ் மகன் உப்பிலிராஜிடம் (23)  நடத்திய விசாரணையில், விருதுநகர் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள லாரி புக்கிங் நிலையத்திலிருந்து ரேஷன் பச்சரிசியை ஏற்றிக் கொண்டு செல்வது தெரியவந்தது. 

அதையடுத்து, கழுகுமலை போலீசார் லாரி மற்றும் அதில் இருந்த ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு மூட்டைகளையும் பறிமுதல் செய்து,  தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் காமராஜ், லாரி புக்கிங் நிலைய உரிமையாளர் ஜனார்த்தனன் உள்பட 6  பேரை கைது செய்தனர். மேலும், லாரி, சுமை ஆட்டோ, தையல் மிஷின், எடை போடும் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Joseph Marketing

crescentopticals





New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory