» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடி, மின்னல் தாக்கியதில் கருகிய காற்றாலை!!

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:19:52 AM (IST)

கயத்தாறு அருகே நேற்று இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய  இடி, மின்னலுடன் பலத்த  மழை பெய்தது.  இந்நிலையில், கயத்தாறையடுத்த பனிக்கர்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையில் இடி, மின்னல் தாக்கியதில் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருந்து வந்த காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  

இந்த தீ விபத்தினால் இறக்கைகள் மற்றும் மேல்பகுதியில் உள்ள சில சாதனங்களும் தீயில் கருகி நாசமாயின.   இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

கமலஹாசன்Apr 17, 2018 - 11:34:13 AM | Posted IP 172.6*****

ஆறு மாதம் சும்மா இருந்த காட்ச்சாலாய் இருந்தா என்ன? இல்லனா என்ன ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD









crescentopticals




Thoothukudi Business Directory