» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேரளாவைப் போல் சம்பளம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 3:27:18 PM (IST)கேரளாவைப் போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

உப்பளத் தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தைப் போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிப்படி மழை காலங்களிலும், வேலையில்லாத நாட்களிலும் நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானதுரை, பொருளாளர் மணவாளன், நிர்வாகிகள் சங்கரன், லிங்கம்மாள் உட்பட நூற்றுக் கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 


மக்கள் கருத்து

தமிழன்Apr 16, 2018 - 04:04:46 PM | Posted IP 172.6*****

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory