» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி அருகே 20 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை : புதுப்பிக்க கோரி ஆட்சியர்க்கு மனு

திங்கள் 16, ஏப்ரல் 2018 1:30:03 PM (IST)துாத்துக்குடி மாவட்டம் அனந்தநம்பிகுறிச்சி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கபட்ட சாலையை புதுப்பிக்க கோரி மாவட்டஆட்சியர்க்கு மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பசுமை தமிழ் தலைமுறை அமைப்பை சேர்ந்த சுகன் கிறிஸ்டோபர துாத்துக்குடி மாவட்டஆட்சியர்க்கு அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண க்கரை ஊராட்சி அனந்தநம்பிகுறிச்சி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கபட்ட சாலை தற்போது வரை பல வருடம் ஆன பின்னரும் சாலை சீரமைக்கப்படவில்லை. சுடுகாட்டிற்கு இந்த வழியைதான் மக்கள் பயன்படுத்தி வருகின்றன.இந்த வழியாக எந்த வாகனம் சென்றாலும் சகதி மண்ணில் சிக்கிவிடும்.

விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தும் தாமிரபரணி ஆற்றிற்குசெல்லும்  சாலை மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது.இதனால் விவசாயிகள் சரியான முறையில் விவசாய பொருட்களை  கொண்டுசெல்ல முடியவில்லை.நீண்ட நாட்களாக மனு கொடுத்தும் பயனற்ற சூழ்நிலையில் உள்ளது கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsNalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Joseph Marketing

Black Forest Cakes

Thoothukudi Business Directory