» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் பிரச்சனையில் அமைச்சர்,எம்எல்ஏ., முரண் : உச்சகட்டத்தில் ஈபிஎஸ்,ஓபிஎஸ் கோஷ்டி மோதல் ?

திங்கள் 16, ஏப்ரல் 2018 11:42:12 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் அமைதியாக இருக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜூவும், ஆலையை மூட வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., சண்முகநாதனும் கூறுவது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1996 ம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டு 1997ம் ஆண்டு முதல் துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டயாபுரம் மக்கள் 50 நாள்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், துாத்துக்குடி உள்ளூர் கட்சியினர் ஆதரவு தெரிவித்ததும் மேலும் விவிடி சிக்னல் அருகே பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகிறார். ஆனால் அதே அதிமுக வை சேர்ந்த துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாெகுதி எம்எல்ஏ., சண்முகநாதனோ கடந்த 3 மாதங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே துாத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கை.அதை எடப்பாடி அரசு செய்யும் என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்து குறித்து கேட்டதற்கு அது அவரின் சொந்த கருத்து, போராடுவோர் மீது வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது என கூறினார். எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் துாத்துக்குடி வந்த போது அதிமுக பிரமுகர் செல்போன் டவரில் ஏறி நின்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்.

ஸ்டெர்லைட்க்கு அனுமதி அளித்தது மறைந்த ஜெயலலிதா. அதை எதிர்க்கும் சண்முகநாதன் எம்எல்ஏ., அமைதியாக இருக்குமாறு கூறும் கடம்பூர் ராஜு ஆகிய மூன்று பேருமே அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வர் ஈபிஎஸ் அணியிலும் சண்முகநாதன் எம்எல்ஏ., துணை முதல்வர் ஓபிஎஸ் அணியிலும் உள்ளனர்.எனவே துாத்துக்குடி அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 10.04.2018 நாளிட்ட செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1-ஐ 31.03.2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது எனவும், 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

makkalApr 16, 2018 - 02:46:46 PM | Posted IP 141.1*****

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது..மிக்க நன்றிகள்

அக்ரி பரமசிவன்Apr 16, 2018 - 01:41:06 PM | Posted IP 162.1*****

நாடக அரசியலின் சதுரங்க ஆட்டம் இது..! பொதுமக்களே உஷார்.

நண்பன்Apr 16, 2018 - 01:29:32 PM | Posted IP 162.1*****

நாம் எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல் போராடி வெற்றி பெறுவோம் ...... இது மக்களின் உயிர் போராட்டம்..........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors


Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory