» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா கோவில் முன்பு போராட்டம் : போலீஸ் குவிப்பு!

ஞாயிறு 15, ஏப்ரல் 2018 12:41:06 PM (IST)



ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி துாத்துக்குடி பனிமயமாதா கோவில் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் பீச் ரோடு பனிமயமாதா கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் நேற்று மாலை உண்ணாவிரத்திற்காக பந்தல் அமைத்தனர். அப்போது அங்கு வந்த தென்பாகம் போலீசார், இந்த இடம் வருமானவரித்துறைக்கு சொந்தமான இடம் எனவே இங்கு பந்தல் போடக்கூடாது என்றனர். இதனைக்கேட்ட போராட்ட்க்குழுவினர் ஒன்று திரண்டு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலைந்து சென்றனர். பந்தலும் அகற்றப்பட்டது.



இந்நிலையில், இன்று காலை துாத்துக்குடி பனிமய மாதா கோவிலை சுற்றியுள்ள தெரு மக்கள் சுமார் 200 பேர் கோவில் அருகே தொடர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆர்தர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாதா கோவில் வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றி   மீனவ மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற தென்பாகம் போலீசார் தொடர் போராட்டத்திற்கு அனுமதியில்லை என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் எங்கள் இடத்தில் தான் போராட்டம் தாெடங்கியுள்ளோம் என வாக்குவாதம் செய்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




பைக் பேரணிக்கு போலீசார் தடை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பைக் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாளையங்கோட்டை ரோட்டில், விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் இருந்து பேரணி புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை முதலே இளைஞர்கள் பைக்கில் வந்தவன்னம் இருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீசார் வந்து பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து பனிமய மாதா கோவில் வளாகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals


Joseph Marketing

New Shape Tailors





Thoothukudi Business Directory