» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ்காரர் மனைவிக்கு டார்ச்சர் : இன்ஸ்பெக்டர் மீது எஸ்பியிடம் புகார்

ஞாயிறு 15, ஏப்ரல் 2018 9:12:46 AM (IST)

தூத்துக்குடி அருகே செல்போன் எண் கேட்டு இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக எஸ்பியிடம் போலீஸ்காரர் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரனிடம் போலீஸ்காரர் மனைவி ஒருவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:  எனது கணவர் சாத்தான்குளம் சப்.டிவிசனைச் சேர்ந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் காவல் நிலையம் அருகே வாடகை வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் வசித்து வருகிறோம். கடந்த 12ம் தேதி இரவு 8.15 மணிக்கு கடை வீதி சென்ற நான், பின்னர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என் கணவர் பணிபுரியும் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், என்னை பற்றி விசாரித்தார். பின்னர் இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசினார். மேலும் என்னிடம் நிறைய பேசவேண்டி இருப்பதாக கூறி செல்போன் எண்ணை  தருமாறு கேட்டார். 

நான் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் என் கணவரை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி விடுவதாக மிரட்டிச் சென்றார்.வீடு திரும்பிய நான், எனது கணவருக்கு தகவல் தெரிவித்தபோது, பணியில் இருப்பதால்  வீட்டில் டைரியில் உள்ள எஸ்.பி. சி.ஐ.டி நம்பருக்கு போன் பண்ணுமாறு கூறினார். அதன்படி நானும் போன் பண்ணினேன். இதையடுத்து இரவு 11 மணிக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி எனது  வீட்டிற்கு வந்து விசாரித்து சென்றார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



crescentopticals


New Shape Tailors



Thoothukudi Business Directory