» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் அறிக்கை!

சனி 14, ஏப்ரல் 2018 6:31:55 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்பினரால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணனின் 31.03.2018 நாளிட்ட அறிக்கையில், "பொதுமக்களால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகார்கள் கருத்தில் கொள்ளப்பட்டு தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது எனவும், விரைவில் இது தொடர்பாக சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 10.04.2018 நாளிட்ட செய்தி குறிப்பில்  "தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1-ஐ 31.03.2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது எனவும், 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமானது தனது 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் ஸ்டெர்லைட் குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது என தமிழக முதலமைச்சரின் டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். 

தமிழகஅரசால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் போராட்டக்காரர்களின் அமைதி போராட்டமானது சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  போராட்டக்காரர்களின் கோரிக்கையினை அரசு தீவிரமாக பரிசீலித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுவதையும் போராட்டக்காரர்கள் கைவிட்டு தங்களது கோரிக்கைகளை அரசிடம் சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் தெரிவித்தும், உரிய அமைதி பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காணலாம்.  

அரசும் தொடர்ந்து கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் அதற்கு மாறாக பொதுமக்களுக்கு அச்ச உணர்வை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


மக்கள் கருத்து

Tuty three kayApr 16, 2018 - 03:55:22 PM | Posted IP 162.1*****

well said Mr.Thermal Raja ,I like your comments.

ஒருவன்Apr 15, 2018 - 01:24:42 PM | Posted IP 141.1*****

மக்களுக்காக அரசா?? கார்பொரேட் காக அரசா ?? இன்னும் அரசு எல்லாம் சில கார்பொரேட் களின் கைக்கூலி ஆகி விட்டது ..

Renete JoelApr 15, 2018 - 05:57:18 AM | Posted IP 141.1*****

Mr S.Raja, well said, I like the last line " Campaign of civil disobedience to reclaim our constitutionally guaranteed rights". We are with in this regard. "We shall overcome one day"- Martin Luther King Jr.

பொதுமக்கள் , தூத்துக்குடிApr 15, 2018 - 01:31:45 AM | Posted IP 108.1*****

மக்களே இந்த ஆட்சியரை யாரும் நம்ப வேண்டாம்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி sterlite நிறுவனத்துக்குத்தான் உறுதுணையாக இருக்கிறார் அடுத்த வாரம், சுற்றுசூழல் அனுமதி கொடுத்துவிட்டது அதனால் திறக்க போகிறோம் என்று சொல்லப்போகிறார்கள் பாருங்கள்?

ஸ்டெர்lite எதிர்ப் பாலர்Apr 14, 2018 - 08:43:42 PM | Posted IP 172.6*****

மறுபடியும் கூடுவோம்...மக்களுக்கான அரசு இல்லை கார்ப்பரேட் கான அரசு

பாலாApr 14, 2018 - 08:18:51 PM | Posted IP 172.6*****

ஸ்டெர்லைட் வரம்பு மீறுகிறதே ஆட்சியர் அவர்களே...

தெர்மல் சொ.ராஜாApr 14, 2018 - 06:52:00 PM | Posted IP 172.6*****

Respected sir, The People's Committee Against Killer Sterlite appeals to the people of Thoothukudi to maintain calm and carry out their protests in a civil and non-violent manner. The law is on our side, and the truth will prevail. We also urge all people including those that are taking action in solidarity with the demands to shut down Sterlite to ensure that media persons are at no point disturbed or abused. At the same time, we are pained to see that the District Administration and the Tamil Nadu Pollution Control Board have failed to stop the illegal construction that is currently going on at the site of Sterlite's proposed 1200 tpd factory. This site lies within the proposed SIPCOT Tuticorin Industrial Park for which no approval has been obtained. In fact, the Tamil Nadu Pollution Control Board has issued a Show Cause Notice to SIPCOT threatening to prosecute them for carrying out operations without statutory licenses. Vedanta Sterlite's ongoing construction is also in violation of the approved Masterplan of Thoothukudi. The District Collector is the chairman of the Local Planning Authority and is empowered to stop any activity that is in violation of the Masterplan. The District Collector can also enforce any action under the Environmental Protection Act, 1986. The people of Thoothukudi are tense and the situation is volatile. We appeal to the District Administration to restore people's faith in the rule of law by acting immediately to stop the ongoing illegal expansion by Sterlite. Failing this, the People's Committee will intensify its campaign of civil disobedience to reclaim our Constitutionally guaranteed rights to life and a clean environment. S.Raja People committee against killer sterlite State Organiser, Tamilnadu Vanigar Sangankalin Peravai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu CommunicationsBlack Forest Cakes


CSC Computer Education


Joseph Marketing

Nalam PasumaiyagamThoothukudi Business Directory