» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு: 17ம் தேதி வரை அமல்

சனி 14, ஏப்ரல் 2018 11:11:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஏப்.15) மாலை 6 மணி முதல் 17ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், கவர்னகிரி கிராமத்தில் 16.04.2018 அன்று வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் 248வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. 

மேற்படி விழாவானது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 15.04.2018 மாலை 06.00 மணி முதல் 17.04.2018 காலை 06.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கவர்னகிரியிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்திலிருந்து 1 கி.மீ.க்கு வெளியே) கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இத்தடை  உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீரன் சுந்தரலிங்கத்தின் 248-வது பிறந்தநாள் விழாவானது அமைதியான முறையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

தம்பரஸ் பாலாஜிApr 14, 2018 - 12:21:33 PM | Posted IP 162.1*****

வீரன் சுந்தர லிங்கம் புகழ் வாழ்க / வீர வணக்கம் வீர வணக்கம் வீரன் சுந்தர லிங்கம் அவர்களுக்கு வீர வணக்கம் என்றும் பாரத தாயின் பக்தியுடன் வீர வாஞ்சி நாதன் பேரவை தூத்துக்குடி மாவட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications


Black Forest Cakes

New Shape Tailors

Joseph Marketing

Thoothukudi Business Directory