» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு - லாரி கண்ணாடி உடைப்பு!

திங்கள் 9, ஏப்ரல் 2018 2:16:02 PM (IST)ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே 8 கிராம மக்கள் மறியல் செய்தனர். இதில் அவ்வழியே வந்த கேஸ் லாரி கண்ணாடி உடைக்கப்பட்டது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 50 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.இவர்களது போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் துாத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனையொட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு குமாரெட்டியாபுரம், மீளவிட்டான், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், பாலைய்யா புரம், மடத்தூர் உட்பட 8 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 

அவர்கள் ஆட்சியர் தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென காேரிக்கை விடுத்தனர். இதில் ஒரு பிரிவினர் திடீரென துாத்துக்குடி திருநெல்வேலி சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் திருநெல்வேலி செல்லும் வாகனங்களை அய்யனடைப்பு வழியே மாற்றுப்பாதையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.


அப்போது அவ்வழியே கேஸ் ஏற்றியலாரி ஒன்று வந்தது.இதை பார்த்த போராட்டம் செய்த இளைஞர்கள் கல்லெறிந்ததில் லாரி கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் குறித்து அறிந்ததும் துாத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் ஆட்சியர் அலுவலகம் வந்து துாத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசை போராட்டம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.

விரைவில் நல்ல முடிவு - ஆட்சியர் உறுதி தொடர்ந்து போராட்டம் செய்தவர்களிடம் பேசிய ஆட்சியர் வெங்கடேஷ், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள், முதல்வர் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணித்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும். அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என  ஆட்சியர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்தார். இந்த போராட்டத்தில் அதிகளவு என்ஜிஓ.,கள் வந்திருந்தனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

தனியார் டிவி கேமராமேனுக்கு மிரட்டல் ?
  
போராட்டத்தை ஏராளமான செய்தி தொலைக்காட்சி கேமராமேன்கள் படம் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட தனியார் செய்தி தொலைக்காட்சி கேமராமேனும் படம் எடுத்து கொண்டிருந்தார். அவரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர்,  இதுவரை எடுத்ததை போட்டுக் காட்டுமாறு மிரட்டினர். இதை பார்த்த மற்ற செய்தியாளர்கள் அவர் அருகே செல்லவே, அந்த இளைஞர்கள் அங்கிருந்து மாயமாகி விட்டனர். 


மக்கள் கருத்து

RAJAApr 10, 2018 - 12:38:53 PM | Posted IP 162.1*****

முட்டாள் டூட்டி ஆன்லைன் நிர்வாகமே நீயும் STERLITE கம்பெனி கிட்ட காசு வாங்கிட்டு தான் இப்படி (" போராட்டத்தில் அதிகளவு என்ஜிஓ.,கள் வந்திருந்தனர்") போடுறியா .

அப்பாவி மக்கள்Apr 10, 2018 - 10:58:34 AM | Posted IP 172.6*****

டூட்டி ஒன்லைன் கமெண்ட் ஏன் டெலீட் பண்றே, இதுதான் உன் நடுநிலையா

அப்பாவி மக்கள்Apr 10, 2018 - 10:40:45 AM | Posted IP 172.6*****

இந்த செய்தியை கவனியுங்கள் மக்களே சில ன்.கி.ஓ செய்கிற வேலை தன இது தேவை இல்லாமலே அப்பாவி மக்களை தூண்டி விட்டு அரசுக்கு எதிரா கோசம் போடா விடுறது இவனுங்க பெரிய தேச விரோத சக்திகள் "இந்த போராட்டத்தில் அதிகளவு என்ஜிஓ.,கள் வந்திருந்தனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது குறிப்பிடத்தக்கது." ஒரு தொழிலும் செய்ய விடாம மக்களை பிச்சைக்காரனாக்கி மதம் மாத்தி அதுல பொழப்ப ஓட்டுற தேச விரோத கும்பல் மக்களே உஷார்....................

தமிழன்Apr 10, 2018 - 10:40:04 AM | Posted IP 172.6*****

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மோடி ஆட்சித்தான்.

தமிழன்Apr 9, 2018 - 07:01:30 PM | Posted IP 162.1*****

போராட்டம் நடத்தீனீர்கள் சரி... அது என்னடா மோடி அவர்களுக்கு எதிராக கோசம்? உங்கள் நோக்கம் என்ன?

ஜெபராஜ்Apr 9, 2018 - 04:23:16 PM | Posted IP 172.6*****

கல்லெறிந்து லாரி கண்ணாடி உடைக்கபடவில்லை கைகளால் உடைக்கப்பட்டன . ஓரே அடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph Marketing

New Shape Tailors

Thoothukudi Business Directory