» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இணையதள மோசடிகள்: தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

வெள்ளி 6, ஏப்ரல் 2018 5:50:15 PM (IST)

இணையதள மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சமீபகாலமாக அமேசான், பிளிப்கார்ட், ஓல்எக்ஸ் போன்ற வர்த்தக இணயதளங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பொருட்களை வாங்குவது, விற்பது, வேலைவாய்ப்பு பதிவு, டிக்கெட் முன்பதிவு போன்றவற்றை மிக எளிதாக ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும், பொதுமக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது, விளம்பரம் தந்துள்ள நபரின்  விபரத்தை அறிந்து, பொருட்களின் உண்மைத் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்பவர் ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட காரை மிகவும் மலிவான விலைக்கு வாங்க முயன்றுள்ளார். கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் கார் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த காரை வாங்குவதற்காக ரமேஷ் முதற்கட்டமாக ரூ.84ஆயிரத்தை விளம்பரம் அளித்த நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பின்னர் ரமேஷ் கோவை சென்று பார்த்தபோது அப்படியொரு நபரும் இல்லை, காரும் இல்லை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்தியதில், ரமேஷ் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு மிசோரம் மாநிலத்தைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என எஸ்பி மகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Joseph Marketing

New Shape Tailors


Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory