» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா : 23ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் பேட்டி

திங்கள் 19, மார்ச் 2018 4:39:17 PM (IST)



தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் என். வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி தாலூகாவில் சராசரியாக ஆண்டிற்கு 620 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் 200மிமீ மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டின் சராசரி மழை அளவை இது மிஞ்சிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.100கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாசிப்பயறு, உளுந்து வகைகளுக்கு பயிர்க்காப்பீடுத் தொகை விரைவில் வழங்கப்படும். 

தூத்துக்குடி ரோச் பூங்காவில் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பெய்த மழை காரணமாக உணவுத் திருவிழா முத்துநகர் கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 50 கடைகள் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும். தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் 23ம் தேதி மாலையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்

24ம் தேதி செல்லப் பிராணிகளின் கண்காட்சி, சாகச நிகழ்ச்சிகள், பெண்களுக்கான சமையல் போட்டி போன்றவை நடைபெறும். 25ம் தேதி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். உணவு பண்டங்கள் குறைவான விலையில் தரமான முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேராட்டம் அமைதியாக நடைபெறும் எனக் கோரியதால் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக உணவுத் திருவிழா விளம்பர போஸ்டரை ஆட்சியர் வெளியிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing




New Shape Tailors




Thoothukudi Business Directory