» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொங்கராயகுறிச்சி புதிய ஆற்றுப்பாலத்தில் பஸ்களை இயக்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

திங்கள் 19, மார்ச் 2018 4:35:58 PM (IST)கொங்கராயகுறிச்சி-கருங்குளம் புதிய ஆற்றுப்பாலம் வழியாக பஸ்களை இயக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொங்கராயகுறிச்சி ஊர்பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைத்தலைவர் மிராசிமீரான், செயலாளர் மீரான், பொருளாளர் மன்சூர், துணைத்தலைவர் இஸ்மாயில், நிர்வாகி பீர்முஜிப் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், கருங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கருங்குளம்-கொங்கராயகுறிச்சி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

இந்த புதிய பாலத்தினை கடந்த நவம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சுமார் 45வருட கால கோரிக்கை நிறைவேறிய வகையில் புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் சுற்றுவட்டார விவசாயிகள், மாணவர்கள், கிராமமக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர். இருந்தபோதும் இந்த பாலத்தில் இதுவரை மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், இரவுநேரங்களில் மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாலத்தின் வழியாக செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்கள், பொதுமக்கள் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாசரேத், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கே சென்று வருகின்றனர்.

இந்நிலையில், புதிய பாலத்தின் வழியாக கொங்கராயகுறிச்சியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு, ஸ்ரீவைகுண்டம், போன்ற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டால் இப்பகுதி கிராமமக்கள் அனைவரும் பெரிதும் பயன்பெறுவார்கள். எனவே, மாணவ, மாணவியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துப்பகுதி கிராமமக்களும் பயன்பெறும் வகையில் புதிய பாலத்தின் வழியாக பஸ்களை இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory