» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள் 19, மார்ச் 2018 4:14:19 PM (IST)தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வைப்பாறு தடுப்பனையை சீரமைக்க வேண்டும், கோவில்பட்டி நகராட்சியில் அரசு உத்தரவின்றி அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகரித்துள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில், வட்டாரத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன், திருப்பதி, சேதுபாண்டியன், அப்பாதுரை, மாவட்ட துணைத்த தலைவர்கள் ரஜாக், முத்துசாமி, மேடைச்சேர்மன், ராஜசேகர், ஐஎன்டியூசி நிர்வாகிகள் சந்திரசேகர், ராஜகோபாலன், பாலராஜ், உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals
Thoothukudi Business Directory