» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும்: ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு

திங்கள் 19, மார்ச் 2018 3:30:58 PM (IST)ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்  ஒப்பந்ததாரர்கள் மனு அளித்தனர்.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த 1994ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றி வருகின்றோம். எங்கள் நிறுவனங்களில் அனைத்து வகையான தொழில் சார்ந்த தொழிலாளர்களும் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் உள்ளனர். அனைவரும் நல்ல உடல் நலத்துடன் பணியாற்றி வருகிறோம். 

எங்களுக்கு எந்தவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டத்தில்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும், சுமார் 15ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த ஆலையில் தொடர்ந்து உற்பத்தி நடைபெறவும், விரிவாக்கம் செய்வதன் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்து தொழில் வளர்ச்சியை பெருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகள் திருமணி மாரியப்பன், லெட்சுமணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து

மக்கள்Mar 21, 2018 - 02:32:11 PM | Posted IP 61.2.*****

உங்க புள்ளைங்களோட தலைமுறையை நினைச்சி பாருங்க உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேர்த்து தான் போராட போறாங்க உசுர விட உழைப்பு முக்கியமா

தூத்துகுடிகாரன் லMar 20, 2018 - 05:07:55 PM | Posted IP 59.99*****

நாங்க எது அனுப்பினாலும் நீங்க அழிக்க போறீங்க ....அப்புறம் என்ன ம...துக்கு உண்மைய சொல்லணும்

kannanMar 20, 2018 - 01:39:48 PM | Posted IP 122.1*****

அப்ப சத்துரு

tamilanMar 20, 2018 - 10:13:51 AM | Posted IP 59.96*****

இவங்கள பார்த்த நுறு ரூபாய் வாங்கிட்டு நிக்கிற மாதிரி இருக்கு ...

உண்மைMar 19, 2018 - 05:06:20 PM | Posted IP 45.12*****

மக்களே நீங்கள் சிந்தித்து உண்மை சொல்லுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing
Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticalsThoothukudi Business Directory