» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றால மலையில் மழை ,அருவிகளில் தண்ணீர் வரத்து : பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாய் 13, மார்ச் 2018 8:10:22 PM (IST)



குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்தது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால் பொதுமக்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாமல் பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்ய துவங்கியது. விட்டு விட்டு மழை நீடித்தது. இன்று பிற்பகல் வரை இதே நிலை நீடித்தது. இதனால் பகல் நேரத்தில் வெயில் இல்லாமல் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

குற்றாலம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஐந்தருவியல் 5 கிளைகளிலும் தண்ணீர் விழத் துவங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் உற்சாகம் அடைந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் அருவிகளில் சீராக தண்ணீர் வரத்து ஏற்படும். இம்மழையால் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing



Thoothukudi Business Directory