» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி

செவ்வாய் 13, மார்ச் 2018 8:45:17 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்து வருகிற 21ம் தேதி ஒரு நாள் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள உயிர்த் தொழில் நுட்பவியல் துறையில் "திலேப்பியா மீன் வளர்ப்பு” குறித்து ஒரு நாள் பயிற்சியானது 21.03.2018 வழங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியில் திலேப்பியா மீன் உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் நீர்தர பராமரிப்பு, இனப்பெருக்க முறைகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்த விளக்ககளும் அறிந்து கொள்ள முடியும். மேலும் மீன்வளர்ப்பை தொடங்குவதிலும், மேம்படுத்துவதிலும் உள்ள விவரங்களை அறிவதில் அவர்களுக்கு வெற்றிகரமாக அமைகின்றன. 

இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300/- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் மற்றும் பயிற்சி முடிவில் சான்றிதல் வழக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 20.03.2018 மாலை 5.00 மணிக்குள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 

உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் பொறுப்பு

மீன்வள உயிர்த் தொழில்நுட்பவியல்துறை
 
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி – 628 008
தொலைபேசி எண் : 0461 – 2340554
அலைபேசி எண் :9884213262
மின் அஞ்சல் :[email protected]


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory