» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக வட்டாட்சியர் மீது புகார்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

திங்கள் 12, மார்ச் 2018 3:49:55 PM (IST)

கோவில்பட்டியில் விதவை உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வட்டாட்சியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பிரேமா. இவர் தனது உறவினர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில மனு அளித்தார். அதில், எனது கணவர் இறந்து 2 வருடங்கள் ஆகிறது. விதவைத் உதவித் தொகை பெறுவதற்காக கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் மனு அளித்தேன். 

அவர் ஆய்வு என்ற பெயரில் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். மானத்தை விற்றுதான் உதவித் தொகை பெற வேண்டும் என்றால் எனக்கு உதவித் தொகையே தேவையில்லை என்று கூறி அவரை திட்டி அனுப்பி விட்டேன். ஆனால், இதுபோன்ற நிலை வேறு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வட்டாட்சியர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals




Thoothukudi Business Directory