» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

திங்கள் 12, மார்ச் 2018 8:52:59 AM (IST)தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் ஒரு புயல் மையம் கொண்டுள்ளதால்  "புயல் எச்சரிக்கை" விடப்பட்டுள்ளது. இதனால்  தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

புயல் எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் ஒரு புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அது குறைந்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழ்நாடு கேரளா இலங்கை மற்றும் லட்சத்தீப் பகுதிகளில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், இந்தப்புயல் இதுவரை இல்லாத ஒரு அசாதாரண நிலையில் நகர்வதாகவும் வானிலை எச்சரிக்கை தகவல் சொல்கிறது. இதன்காரணமாக மீன்வளத்துறைக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. 

நேவி மற்றும் கோஸ்ட்கார்டுக்கும் தகவல் கொடுத்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை எச்சரித்து கரைக்கு அனுப்பவும், அல்லது பாதுகாப்பாக அருகிலுள்ள துறைமுகங்களில் வந்து சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை தெரிந்த வழிகளிலெல்லாம் தொடர்புகொண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை கரை திரும்ப அல்லது அருகிலுள்ள துறைமுகங்களில் அவசரமாக வந்து சேர தகவல்களை பரிமாறவும் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவாகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவள இயக்குனர் நெரில் வந்து தெரிவித்தை தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் நாட்டுப்படகுகள் கலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும். மறு அறிவிப்பு வரும் வரையில் படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே ஒக்கி புயலால் பல நாட்களுக்கு வேலைக்கு செல்லாமல் சிரமபட்ட நிலையில் மீண்டும் புயல் சின்னத்தால் தொழிலுக்கு செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் திரேஸ்புரம் கடல் பகுதியில் மட்டும் 1500 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை நம்பியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்தை காக்கும் வகையில் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsThoothukudi Business Directory