» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதியதாக 32 பட்ட மேற்படிப்பு இருக்கைகள் : அமைச்சர் தகவல் !!

வியாழன் 1, மார்ச் 2018 4:09:16 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதியதாக 32 பட்ட மேற்படிப்பு இருக்கைகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி 100 MBBS  இருக்கையுடன் தொடங்கப்பட்டது. அம்மா அவர்களின் சீரிளய முயற்சியால் 2013-ஆம் ஆண்டு இவ்விருக்கைகள் 150-ஆக உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவக் கல்லுரியிலிருந்து இதுவரை 18 ஆண்டுகளில் 1400 மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். 

ஆனால் இந்த மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பிற்கான இருக்கைகள் இல்லாத நிலை இருந்தது.  இக்குறையை போக்கும் வகையில் மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் அரசு  பொது மருத்துவத் துறையில் (General Medicine) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகளும், அறுவை சிகிச்சை துறையில் (General Surgery) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகள், குழந்தைகள் நலத் துறையில் (Pediatrics) 06 பட்ட மேற்படிப்பு இருக்கைகள், மகப்பேறு துறையில் (Obstetrics & Gynecology) 06 பட்ட மேற்படிப்பு இருக்கைகள் என மொத்தம் 32 புதிய இருக்கைகள்  பட்டமேற்படிப்பிற்காக தொடங்கப்படவுள்ளது.  

இதற்கான ஒப்புதல் இந்திய மருத்துவ குழுவால் வழங்கப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நடைபெறும். இவ்வரசின் இந்த சீரிய முயற்சி மருத்துவக் கல்வி துறையில் மேலும் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.   இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மேலும் சிறந்த சிகிச்சையை பெற முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory