» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வியாழன் 1, மார்ச் 2018 10:51:38 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் ‘திரச்சீரலைவாய்‘ என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா நடைபெற்றது. இத்திருவிழாவின் 10ம் திருவிழாவான இன்றுகாலை தேரோட்டம் நடந்தது. 

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. காலை 5.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையடன் தேரில் எழுந்தருளினார். அதிகாலை 5.45 மணிக்கு விநாயகர் வீற்றிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி காலை 6.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனைதொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

அப்போது திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் முழங்கினர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி சரியாக காலை 8.25 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனை தொடர்ந்து காலை  8.35 மணிக்கு தெய்வானை அம்மன் வீற்றிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ரதவீதிகள் சுற்றி 9.35 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்சி மாலைமுரசு நிர்வாக இயக்குனர் கதிரேச ஆதித்தன்,  கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., தங்கவேலு, தாசில்தார் அழகர், கோயில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், காயாமொழி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார், மாவட்ட தலைவர் டாக்டர் அரசு ராஜா, மாவட்ட பொதுசெயலாளர் சக்திவேலன், பா.ஜ.க, மாநில விவசாய அணி பொதுசெயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். லந்து கொண்டனர்.


தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. தீபு, சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் கோயில் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, தாலுகா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். மாசிதிருவிழாவின் 11ம் திருவிழவான நாளை(2ம் தேதி) இரவு தெப்பகுளத்தில் தெப்ப உற்சவ திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals





Thoothukudi Business Directory