» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

ஞாயிறு 25, பிப்ரவரி 2018 8:58:03 AM (IST)

தூத்துக்குடி அருகே படகு என்ஜின் திடீரென பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரின்சோ (வயது 30). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடந்த 22–ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் (32), மெஸ்ரின் (45), புஷ்பராஜ் (48), பிரசாத் (35), அண்டோ (34), ராபின் (28) ஆகிய 7 பேரும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் மணப்பாட்டில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, படகு என்ஜின் திடீரென பழுதடைந்தது. 

இதனால் படகில் இருந்த 7 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் ஆதேஷ் விரைந்து சென்றது. அங்கு கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். மீனவர்கள் 7 பேரும் நேற்று மதியம் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors
crescentopticals

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory