» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

ஞாயிறு 25, பிப்ரவரி 2018 8:55:42 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம் நடந்தது. பின்னர் காலையில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் சன்னதியில் திருமஞ்சனம் கோஷ்டி நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி நம்மாழ்வார் பரங்கி நாற்காலி சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

4–ம் தேதி தேரோட்டம் 

5–ம் திருநாளான 28–ம் தேதி இரவில் கருடசேவை நடக்கிறது. கருட வாகனத்தில் சுவாமி பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9–ம் திருநாளான 4–ம் தேதி காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளுகிறார். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

10–ம் திருநாளான 5–ம் தேதி இரவில் பெருமாள் தெப்பம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 11–ம் திருநாளான 6–ம் தேதி இரவில் ஆச்சாரியார்கள் தெப்பம் நடக்கிறது. சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

12–ம் திருநாளான 7–ம் தேதி மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 8–ம் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம், சாத்துமுறை கோஷ்டிக்கு பின்னர் ஆழ்வார்திருநகரிக்கு திரும்புகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விசுவநாத், தக்கார் கார்த்திக் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsJoseph MarketingNew Shape TailorsThoothukudi Business Directory