» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.7229.44 கோடி அளவுக்கு கடனாற்றல்: திட்ட அறிக்கை வெளியீடு

சனி 24, பிப்ரவரி 2018 4:42:45 PM (IST)தமிழகத்தின் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ. 7229.44 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. நடப்பாண்டை விட்டு அதிக கடனாற்றல் வளங்களை மதிப்பீடு செய்துள்ளது.

2018-19 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார். இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்றார். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன் படுத்துதல் கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும் என்ற ஆட்சியர் வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

பாரதிய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசந்திரன் பேசுகையில், இந்த திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார். இந்த அறிக்கை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் உள்ள ஒதுக்கீடுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்

முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின்பேரில் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படுமென அறிவித்தார். மேலும் இந்த திட்ட அறிக்கையை ஓர் முன் மாதிரியாக வைத்து தங்களது கிளைக்கான கடன் திட்ட குறியீட்டை தயார் செய்து அதை குறிப்பிட்ட படிவத்தில் தங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்

நபார்டு வங்கியின் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜயபாண்டியன் இக்கடன் திட்ட அறிக்கை பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய மாற்றங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

nnnnnFeb 24, 2018 - 06:18:42 PM | Posted IP 223.1*****

எப்போ குடுப்பாங்க எப்போ பறிமுதல் செய்வாங்கனு கேட்டு சொல்லுங்கப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers

New Shape Tailors

crescentopticals
Thoothukudi Business Directory