» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்துவரி நிலுவையாக உள்ள கட்டிடங்களுக்கு சீல்! தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

புதன் 21, பிப்ரவரி 2018 4:46:44 PM (IST)

தூத்துக்குடியில் சொத்துவரி நிலுவையை மார்ச்.7-க்குள் செலுத்த தவறினால் சொத்துக்களை கையகப்படுத்தவும், பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என  மாநகராட்சி ஆணையர் மற்றும் தனிஅலுவலர் அல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு : தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி மாநகராட்சி சொந்தமான கடைகள் மற்றும் குத்தகை இனங்களுக்குரிய கட்டணம் ஆகியவைகளை நடப்பு நிதியாண்டுக்குரிய (2017-18) வரி இனங்களை நிலுவையின்றி மாநகராட்சி கணிணி வசூல் மையத்தில்  செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் சொத்துவரி அரையாண்டு ஆரம்பித்த 30 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள முதல் அரையாண்டு வரி ஏப்ரல் மாதத்திற்குள்ளும், அக்டோபர் முதல் மார்ச் முடிய உள்ள இரண்டாவது அரையாண்டு வரி அக்டோபர் மாதத்திற்குள்ளும் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு இல்லாத பல்வேறு கட்டிடங்கள் 2016-17 இரண்டாம் அரையாண்டு வரை சொத்துவரி செலுத்தாமல் பெருமளவில் நிலுவையில் இருப்பதால்  மாநகராட்சி மூலம் மாநகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 2017-18ம் நிதியாண்டு முடியும் தருவாயில் உள்ளதால் நிலுவையாக உள்ள அனைத்து வரியினை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் நிலையில் மாநகராட்சி சட்டவிதிகள் மற்றும் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்திரவின் அடிப்படையில் 20.02.2018 தேதி வரை நிலுவையில் உள்ள வணிக நிறுவனத்தின் நிலுவை தொகையினை 07.03.2018க்குள் செலுத்த தவறினால் வணிக நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்தவும், பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என  மாநகராட்சி ஆணையர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்துள்ளார். மேற்படி நிலுவைதாரர்களின் நிலுவைப்பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி இணையதள முகவரி www.thoothukudicorporation.com  


மக்கள் கருத்து

இந்து மக்கள் கட்சிFeb 23, 2018 - 10:45:10 AM | Posted IP 122.1*****

முதல்ல தண்ணீர் இணைப்புக்கு பணம் செலுத்தி வருஷ கனக காத்திருக்கின்ற பொதுமக்களுக்கு தண்ணீர் குடுங்க அத பத்தி மஹாராட்சி வாய திறக்காம இருந்துட்டு இதுக்கு மட்டும் விரிஞ்சி கட்டிக்கிட்டு வரீங்க .கான்ட்ராக்டர்ஸ் வேலைய முதல்ல ஒழுங்கா முடிக்க வைங்க அப்புறம் பொதுமக்கள்ட vaanga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD
New Shape Tailors


crescentopticalsThoothukudi Business Directory