» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் சுற்றுச்சூழல் கேடு : உடன்குடியில் பொதுமக்கள் அச்சம்

புதன் 14, பிப்ரவரி 2018 1:36:41 PM (IST)உடன்குடி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து ஏரிக்கப்படுவதால் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள்,உணவக மீதங்கள்,இறைச்சிக்கடை கழிவுகள் கொட்டபட்டு அள்ளப்படாததால் அவை மலை போல குவிந்து காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சாலை ஓரங்களில் கொட்டப்ப டுவதால் வாகனங்கள் செல்லும் போதும் காற்று வேகமாக வீசும்போதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றன. அண்மையில் உடன்குடி சந்தையடியூர் பகுதியின் குடியிருப்பு பகுதியில் குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இந்த தீயானது காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஏரிந்துகொண்டேஇருப்பதால் குழுந்தைகள்,பெரியோர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுவதோடு தொடர்ச்சியான இருமல் ,மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.குப்பைகளை அள்ளாதது குறித்து பேரூராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் குப்பைகள் அள்ளுவதில் குறைபாடு நிலவுவதாக கூறினர்.

இந்நிலையில் உடன்குடி நகரின் மையப்பகுதியில் ஆமைந்துள்ள கொடிக்கால் காடு பகுதியில் புதன்கிழமை காலையில் குப்பைகளுக்கு தீ வைக்க ப்பட்டுள்ளது. இப்பகுதியின் அருகில் மருத்துவமனைகள், குடியிருப்புகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகள் அமைந்துள்ளன. இக்குப்பைகளோடு பிளாஸ்டிக்,உணவக மீதங்கள், இறைச்சி க்கடை கழிவுகளும் சேர்ந்து எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் உடல் நல பாதிப்பு,சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் ஆபாயம் உண்டானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.ஏனவே பேரூராட்சி சார்பில் குப்பைகளை அள்ளுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory