» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புதன் 14, பிப்ரவரி 2018 12:17:42 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விடும் தினமான புனித வெள்ளிக் கிழமையையொட்டி அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் துவக்கம் சாம்பல் புதன் எனப்படும் நாளில் துவங்குவதுண்டு. அந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு அனைத்துக் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு தவக்காலத்தின்போது, குருத்தோலை பவனியில் பயன்படுத்தப்பட்ட ஓலைகள் தீயில் கொளுத்தப்பட்டு, அந்த சாம்பலை பங்குத்தந்தையர்கள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசி சிலுவை அடையாளமிட்டனர்.

இதையொட்டி தூத்துக்குடி சின்னக்கோயிலில், தூய பனிமய மாதா பேராலயம், புனித அந்தோனியார் திருத்தலம், யுதா ததேயு திருத்தலம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை பிராங்கலின் பர்னான்டோ தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மார்ச் 30ம் தேதி அன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 1ம்தேதி அன்று இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




crescentopticals




Thoothukudi Business Directory