» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளங்களில் நீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

புதன் 14, பிப்ரவரி 2018 11:21:41 AM (IST)நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலைமொழி விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக முதலைமொழிகுளம் விவசாயிகள் நல சங்க தலைவர் கோயில்பிள்ளை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மருதூர் மேலகால் மூலம் பாசன வசதி பெரும் முதலைமொழிகுளம் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாத காரணத்தால் விவசாயம் நடைபெறவில்லை. இந்த பருவத்தில் குளத்திற்கு தண்ணீர் பெருகியதால் விவசாயம் நடைபெற்றது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகளை ஈடு வைத்தும் விவசாயம் செய்தார்கள். 

இந்த விவாசயிகள் அனைவரும் ஏழை எளிய குறு விவசாயிகள் ஆவர். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால், மடைகளுக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டன. இதனால் நெற்பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டது. இதனால் விவாசாயிகள் பெரும் கவலையும் அடைந்து உள்ளார்கள். இந்த பகுதி குளங்கள் மூலம் சுமார் 100 கோடிக்கு நஷ்டம் ஏற்படலாம் என உணரப்படுகிறது. இதனால், பெரிய போராட்டம், மறியல் போன்றவைகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பல விவசாயிகள் மன வேதனையின் காரணமாக தற்கொலைக்கு உட்படுவார்கள் என கருதப்படுகிறது. 

எங்கள் குளத்திற்கு தண்ணீர் வரும் மருதூர் மேலக்காணலை தவிர மற்ற வடகால்களுக்கு அதிக அளவு தண்ணீர் போய் கொண்டு இருக்கிறது என்பதையும் பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் குளத்திற்கு தண்ணீர் வேண்டி 24.11.2017 மற்றும் 24.1.2018 தேதியில் விண்ணப்பம் செய்து உள்ளோம் அரசு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து நாசரேத் பகுதிகளில் நட்ட நெல் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals
Joseph Marketing

New Shape Tailors
Thoothukudi Business Directory