» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் 3பேர் மாயம்

புதன் 14, பிப்ரவரி 2018 10:43:57 AM (IST)

ஆத்தூரில் பள்ளி மாணவர்கள் 3பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் புதுத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் விசாகன் (14), ராஜ் மகன் ஸ்ரீகாந்த் (14), முடுக்குத்தெரு லெட்சுமணன் மகன் விக்னேஷ் (15) ஆகிய 3 பேரும் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஒரே வகுப்பு நண்பர்களான இவர்கள் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

ஆனால் மதியம் வீட்டிற்கு சாப்பிட செல்லவில்லை. அத்துடன் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, காலையில் பள்ளிக்கு வந்த அம் மாணவர்கள் 3 பேரும் மதிய உணவு வேளையில் வெளியே சென்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. அவர்களின் புத்தகப் பைகள் வகுப்பறையில்தான் உள்ளன என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் காணாமல் போன மாணவர்களை பல இடங்களிலும் தேடினர். 

ஆனால் அவர்களை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே மாணவர்கள் மாயமானது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த 3 மாணவர்களும் நேற்று மதியம் ஆத்தூர்- திருச்செந்தூர் சாலையில் ஒரே சைக்கிளில் செல்லும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவானது தெரியவந்தது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
crescentopticals

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Thoothukudi Business Directory